மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛கங்குவா'. பிரமாண்டமான பட்ஜெட்டில் சூர்யா 10 விதமான கெட்டப்பில் நடித்து வரும் இந்த படத்தில் நான்கு வித்தியாசமான சண்டை காட்சிகள் இருப்பதாக தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
அது என்னவென்றால், தண்ணீருக்குள் இருந்தபடியே ஒரு சண்டைக்காட்சி. மரத்தின் கிளையில் நின்றபடி ஒரு சண்டைக்காட்சி. பீச்சில் உள்ள படகுகளில் ஒரு சண்டைக்காட்சி, பறக்கும் விமானத்தில் ஒரு சண்டை காட்சி. இப்படி நான்கு விதமான அதிரடி சண்டை காட்சிகள் சூர்யாவின் கங்குவா படத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சண்டை காட்சிகள் மிகுந்த பாதுகாப்புடன் படமாக்கப்பட்டுள்ளதாம். இப்படி ரிஸ்க் எடுத்து படமாக்கப்பட்டுள்ள இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் அப்படக்குழுவினர்.