இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சந்திரமுகி- 2 படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த படம் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா -2 படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ்.
அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்த அசால்ட் சேது வேடத்தில் முதலில் என்னை தான் நடிப்பதற்கு அழைத்திருந்தார். அப்போது நான் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் என்னால் நடிக்க இயலவில்லை என்று கூறியுள்ள ராகவா லாரன்ஸ், ரஜினி குறித்த இன்னொரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால், ஏற்கனவே நான் நடித்த காஞ்சனா- 2 படத்தில் ரஜினியைதான் ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்காக அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருந்தபோதுதான் அந்த படத்தில் ஒரு சீனில் ஹீரோ, தனது தாயின் இடுப்பில் உட்காருவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சி அந்த கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் ரஜினி சார் அதுபோன்ற காட்சி நடித்தால் அது செட் ஆகாது என்பதினால் அந்த முடிவில் இருந்து பின் வாங்கி நானே நடித்து விட்டேன். இல்லையென்றால் காஞ்சனா -2 படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடித்திருப்பார் என்று ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.