ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் 90களின் கடைசியில்தான் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறினார்கள். 2000 வருடத்திற்குப் பிறகு அவர்கள் முழுமையான ஆக்ஷன் படங்களில் நடிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள்.
1992ல் வெளியான 'நாளைய தீர்ப்பு' படம் முதல் 2002ல் வெளிவந்த 'யூத்' படம் வரையிலும் விஜய் ஒரு காதல் நாயகனாக மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தந்தார். இடையில் ஒரு சில படங்களில் அவர் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தாலும் அவையெல்லாம் பெரிதாக ஈர்க்கவில்லை. விஜய் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்து அந்தப் படத்திற்கு வரவேற்பும் கிடைத்தது என்றால் 2002 நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று வெளியான 'பகவதி' படத்தைத்தான் சொல்ல வேண்டும். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் தேவா இசையில் வெளிவந்த அந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது.
இருப்பினும் அதே தினத்தில் அஜித் நடித்து வெளிவந்த 'வில்லன்' படம் 'பகவதி' படத்தை விடவும் பெரிய வெற்றியைப் பெற்றது. கேஎஸ் ரவிக்குமாரின் இயக்கம், அஜித்தின் இரண்டு வேட நடிப்பு, நகைச்சுவை, பரபரப்பான திரைக்கதை என அந்தப் படம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. 2001ல் வெளிவந்த 'தீனா' படத்திலேயே முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்து 'தல' என அந்தப் படத்திலிருந்து பேசப்பட்ட அஜித்துக்கு 'வில்லன்' படத்தின் வெற்றி மிகப் பெரிய திருப்புமுனையைத் தந்தது.
இன்றைய நவம்பர் 4ம் தேதியில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களில் 1983ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'தங்கமகன்', டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'தங்கைக்கோர் கீதம் (1983)', சிவாஜி கணேசன், பிரபு நடித்த 'வெள்ளை ரோஜா (1983)', கமல்ஹாசன் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே (1984)', விஜயகாந்த் நடித்த 'ரமணா(2002), சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை (2002), இயக்குனர் சேரன் கதாநாயகனாக அறிமுகமான 'சொல்ல மறந்த கதை (2002), ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்தே (2021), கடந்த வருடம் 2022ல் வெளிவந்த 'லவ் டுடே' ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.