ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த படம் புதுப்பேட்டை. அந்த காலகட்டத்தில் இப்படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தையே பெற்றது. ஆனால் தற்போதைய காலத்தில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . அவ்வப்போது ரீ ரிலீஸ் ஆகி வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான கமலா தியேட்டரில் இப்படம் இன்று மாலை, இரவு, நாளை(நவ., 4) ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சமீபத்தில் தனுஷின் வடசென்னை படத்தை இதே திரையரங்கம் ரீ ரிலீஸ் செய்து ஐந்து லட்சத்திற்கு மேல் வசூலை ஈட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.