பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இதன் பிஸ்னஸ் மற்றும் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை பிரியங்கா மோகன் சென்னையில் கேப்டன் மில்லர் பட டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த செய்தியை தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.