கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
நடிகை நயன்தாரா தனது 75வது படமாக 'அன்னபூரணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார் . ராஜா ராணி படத்திற்கு பிறகு இதில் நயன்தாரா உடன் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார், ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் தலைப்பை ஒரு வீடியோ உடன் அறிவித்தனர். அதில் இடம் பெற்ற காட்சிகள் சர்ச்சையாகின. இப்போது இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.