கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்ரன். குறும்படங்கள், ஆல்பம் சாங்ஸ் மூலம் பிரபலமான அவர், நேரம் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. தற்போது இளையராஜா இசையில் 'கிப்ட்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், தியேட்டர்களுக்கான படங்களை இயக்குவதில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதேசமயம் ஆல்படம், ஓடிடி படங்கள் இயக்குவேன் என கூறியிருந்தார்.
இந்த செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி இயக்குநர் சுதா கொங்கரா எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் என்னை உயிர்த்தெழ வைத்தது பிரேமம் படம். அது போன்ற படைப்புகளை மீண்டும் தாருங்கள். உங்களை மிகவும் மிஸ் செய்வேன் " என கூறியுள்ளார்.