ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே .சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இவர் இயக்கி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யிடத்தில் இரண்டு முறை தான் கதை சொன்னதாகவும், அந்த இரண்டு கதையுமே அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். என்றாலும் விரைவில் விஜய் எதிர்பார்க்கும் வகையிலான அவருக்கு 100% பிடித்தமான கதையோடு சென்று, அதை சொல்லி அவரிடத்தில் கால்சீட் வாங்குவேன். அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் என்கிறார்.