மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் |
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயனின் வீக்னெஸ் குறித்த ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், சிவகார்த்திகேயனுக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் அடிமையாகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே ஏதாவது இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். அவர் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அருகில் இருக்கும் நம்மையும் சாப்பிடச் சொல்லி வலியுறுத்துவார் என்று சிவகார்த்திகேயன் குறித்த ஒரு தகவலை அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.