பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த தங்கலான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ள நிலையில், இந்த படத்தை வருகிற பொங்கல் திருநாள் அன்று திரைக்கு கொண்டு வருவதற்கு அவர் திட்டமிட்டு இருப்பதாகவும், அதை முன்னிட்டு இறுதிக்கட்ட பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருவதாகவும் தற்போது அப்பட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.