11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் |
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான படங்களைக் கொடுத்த இயக்குனர்களுக்கு அவர்கள் இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் பரிசளிப்பதும், அந்த ஹீரோக்களை வைத்து படங்களைத் தயாரித்தவர்கள் ஹீரோக்களுக்கு பரிசளிப்பதும் பல வருடங்களாக இருந்து வருகிறது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படத்தின் பெரும் வெற்றிக்காக அந்தப் படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களைப் பரிசளித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
'லியோ' படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கார் பரிசளிப்பது குறித்து விஜய் சொன்ன ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த போது அதன் வெற்றிக்காக விஜய்க்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்க நினைத்து விஜய்யிடம் பேசினாராம் லலித்குமார். அதற்கு பதிலளித்த விஜய், “அதுதான் சம்பளம் கொடுத்துட்டீங்களே, கார் எதற்கு ?,” எனச் சொன்னார் என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இந்த 'கார்' விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.