பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கிண்டி, வேளச்சேரியைச் சேர்ந்தவர் திருமால், 54; ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 7வது நீதிமன்ற நீதிபதி. இம்மாதம் 18ல் 'பீனிக்ஸ் மால்' அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பூங்கா கதவு மூடுவது தொடர்பாக, அங்கிருந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து சேர்ந்து, நீதிபதியை ஆபாச வார்த்தைகளில் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில், நீதிபதி திருமால் புகார் அளித்தார். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் ஜெயமணி, மாரிமுத்துவை கிண்டி போலீசார், நேற்று கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவித்தனர்.




