பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சென்னை: நடிகர் விஷாலின் புகாரை தொடர்ந்து இந்தி டப்பிங்கிற்கு சென்னை அலுவலகத்திலேயே தணிக்கைசெய்து கொள்ளலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நடிகர் விஷால் மார்க் ஆண்டனி இந்தி டப்பிங் படத்திற்காக மும்பை தணிக்கை துறை அலுவலக அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டனர் என கூறிய புகார் பெரும்பரபரப்பை உருவாக்கியது.
இதனையடுத்து மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதன்படி தென்னிந்திய படங்கள் தொடர்புடைய தணிக்கை அலுவலகத்திலேயே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். பரிசோதனை முயற்சியாக வரும் அக்.,20 ம் தேதி முதல் அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
முன்னதாக இந்தி டப்பிங் படங்களுக்கு தணிக்கை மும்பை அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.