Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் குழந்தைக்கு தந்தையானார் பிக்பாஸ் புகழ் ஆரவ்

11 அக், 2023 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Arav-of-Bigg-Boss-fame-became-a-father-to-a-baby-girl

தமிழில் முதன்முதலில் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வானவர் ஆரவ் நபீஸ். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதால் பிக்பாஸ் ஆரவ் என்று பலரால் அறியப்படும் இவர் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் பெரிய அளவில் அவை வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் கடந்த வருடம் வெளியான கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பு பெற்றார்.

அதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுடன் சேர்ந்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் அவற்றிலிருந்து மெல்ல விலகி கடந்த 2020ல் ரஹீ என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆரவ். கடந்த 2021 நவம்பரில் இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் தற்போது பெண் குழந்தைக்கும் தந்தையாகி இருக்கிறார் ஆரவ். இது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன் இரண்டு குழந்தைகளுடன் தம்பதி சகிதமாக உள்ள தங்களது புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆரவ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அக்ஷய் குமாரின் ஜிம் மேட் ஆக மாறிய டொவினோ தாமஸ்அக்ஷய் குமாரின் ஜிம் மேட் ஆக மாறிய ... விஜய் - பிரசாந்த் பங்குபெறும் பிரண்ட்ஷிப் பாடலை படமாக்கிய ராஜூ சுந்தரம் விஜய் - பிரசாந்த் பங்குபெறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)