ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் நடித்துள்ள 'லியோ' படம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வட மாநிலங்களில் படத்திற்கு வரவேற்பைப் பெறவே ஹிந்தி நடிகரான சஞ்சய் தத்தை படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அதற்கேற்றபடி ஹிந்திக்கான போஸ்டர்களில் சஞ்சய் தத் தவறாமல் இடம் பெற்று வருகிறார். இருப்பினும் வட மாநிலங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 'லியோ' படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
தியேட்டர்களில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டும் என்பது மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தின் கோரிக்கை. ஆனால், தமிழ்ப் படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிறது. எனவே, பெரும்பாலான தமிழ்ப் படங்கள் வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாவதில்லை. எனவே, 'லியோ' படம் சிங்கிள் ஸ்கிரீன்களில் மட்டுமே வெளியாக உள்ளது.