நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படம் இம்மாதம் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக லியோ படத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். இந்நிலையில் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரில், லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் ஐந்தாம் தேதியான இன்று வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்கள். மேலும் படத்தில் மொத்தம் 13 காட்சிகளுக்கு கட், மியூட் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் 34 வினாடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




