ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
மதுரியா புரொடக்ஷன் சார்பில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்துள்ள படம், 'இந்த கிரைம் தப்பில்ல'. மலையாள இயக்குனர் தேவகுமார் இயக்கியுள்ளார். பரிமளவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.எம்.எம்.கார்த்திகேயன் இசை அமைத்துள்ளார். பாண்டி கமல், மேக்னா எலன், ஆடுகளம் நரேன், முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேஸி கோபால், காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 6ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி கூறியதாவது : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பின்னணியில் உருவாகி உள்ள படம். பாலியல் குற்றவாளிகள் தங்களின் பண பலத்தால் எளிதில் தப்பி விடுகிறார்கள். இதனால் தன் மகளை பலாத்கார சம்பவத்திற்கு பலிகொடுத்த ஆடுகளம் நரேன் தனக்கென்று ஒரு இளைஞர் படையை வைத்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் பாலியில் குற்றவாளிகளை தண்டிக்கிறார். அவரிடம் ஒரு பெரிய உதவி கேட்டு கிராமத்திலிருந்து வருகிறார் நாயகி மேக்னா எலன். அது என்ன உதவி, அதை ஆடுகளம் நரேன் நிறைவேற்றினாரா? நாயகன் பாண்டி கமல் யார்? அவர் என்ன செய்தார் என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு சான்றிதழ் தரவே தயங்கினார்கள். பின்னர் ஒரு வழியாக அவர்களோடு வாதாடி போராடி 16 கட்டுகளுடன் ஏ சான்றிதழ் பெற்றோம். படத்தின் டிசைனில் நீதி தேவதையின் ஒரு கையில் அரிவாளும், தராசில் பணமும் இருப்பதாக வடிவமைத்து இருந்தோம். அதை மாற்றச் சொன்னவுடன் மாற்றிவிட்டோம். என்றார்.