ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'எனக்கு என்டே கிடையாது'. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடித்துள்ள ஸ்வயம் சித்தா ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்தவர். ஓடிடியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய ஆட்டோ சங்கர் தொடரில் நடித்தார். அதன் பிறகு சத்திய சோதனை, லவ், இறுதி பக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது கேப்டன் மில்லர், இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 'எனக்கு என்டே கிடையாது' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக படத்தின் இயக்குனர் விக்ரம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசியதாவது: தயாரிப்பாளரிடம் கதை சொல்வதற்கு முன்பு, இதுதான் பட்ஜெட், நான்தான் ஹீரோ என்று சொல்லிவிட்டேன். ஒரு படத்துக்கு நல்ல கதையும், நல்ல தயாரிப்பு நிறுவனமும் அமைந்தால் போதும், யார் வேண்டுமானாலும் படத்தை உருவாக்கலாம். புரமோஷன் நிகழ்ச்சியில் ஹீரோயின் கலந்துகொள்ளவில்லை. காரணம் 'இந்தியன் 2', 'கேப்டன் மில்லர்' போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இனி பெரிய பட்ஜெட் படங்களில்தான் நடிப்பார் போலிருக்கிறது.
இப்படத்தில் ஒரே நாளில் பல பிரச்னைகளை சந்திக்கும் நான், இத்துடன் என் வாழ்க்கை முடிந்தது என்று நினைக்கும்போது, மீண்டும் ஒரு புதிய விஷயம் தொடங்குகிறது. அதனால்தான், 'எனக்கு எண்டே கிடையாது' என்ற டைட்டிலை சூட்டினேன். ஒரு முடிவில் இருந்து தொடங்கும் இன்னொரு கதையாக படம் உருவாகியுள்ளது. என்றார்.