லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் உருவான திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட இப்படம் சமீபத்தில் முதல் பாகமாக ‛துருவ நட்சத்திரம் - யுத்த காண்டம்' எனும் பெயரில் வெளியாகும் என தெரிவித்தனர். இதில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ் கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
சமீபகாலமாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணியில் விக்ரம் ஈடுபட்டிருந்த போது இந்த படத்தை முழுவதும் பார்த்து இதனை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.