கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் |
நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். தான் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தில்தான் விஜய்யை அவர் அறிமுகம் செய்தார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக விஜய் வலம் வருகிறார்.
சினிமாவை தாண்டி தற்போது ‛கிழக்கு வாசல்' என்ற ஒரு டிவி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சந்திரசேகர். சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛கடந்த இரண்டு மாதங்களாகவே எனது உடம்பில் எனர்ஜி குறைவாக இருந்தது. அதையடுத்து மருத்துவமனை சென்று ஸ்கேன் பண்ணி பார்த்தபோது, உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதனால் சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இப்படித்தான் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்குமே நன்மையும் நடக்கும். கெட்டதும் நடக்கும். அது எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதோடு பிரச்சனை வருகிறது என்பதற்காக சோர்ந்து போகக்கூடாது. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக அதை எதிர்கொள்ள வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு படத்தில் நடிக்க உள்ள விஜய், இந்த படத்திற்காக அமெரிக்கா சென்று இருந்தார். நேற்று முன்தினம் அவர் சென்னை திரும்பிய நிலையில் தனது தந்தை ஏஸ்.ஏ.சந்திரசேகரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து ‛‛உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து'' என பதிவிட்டுள்ளார் சந்திரசேகர்.
விஜய்யின் அரசியல் முன்னெடுப்பு, அவரின் மக்கள் இயக்கம் தொடர்பாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்கும் மனஸ்தாபம் நிலவுகிறது. இதற்குமுன் பட விழாவில் விஜய் அவரது அப்பாவை கண்டுகொள்ளாமல் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தச்சூழலில் இருவரின் சந்திப்பு மீண்டும் இருவருக்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது.