ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

சமுத்திரகனி இப்போது தமிழை விட தெலுங்கில் அதிக பிசியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் அவர் இயக்கிய 'புரோ' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் சமுத்திரகனிக்கு படம் இயக்கும் வாய்ப்பும் தேடி வர துவங்கி உள்ளது. தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்பதற்காக தெலுங்கு பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இயக்கிய 'புரோ' படத்தைப் பார்த்துட்டு சிரஞ்சீவி பாராட்டினார். எங்க குடும்பத்துல இருக்கிற எல்லா ஹீரோவையும் இயக்குங்கன்னு சொன்னார். அவரை இயக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அவர் பிசியான நடிகர். எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று நினைக்கிறேன். பிரபாஸ் நடிக்கிற 'ஸ்பிரிட்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வருகிறேன் என்கிறார் சமுத்திரகனி.