விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் தமிழ் நடிகைகளான கிரண் மற்றும் ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், சென்றவாரத்தில் கிரண் வெளியேற்றப்பட்டார். ஆனால், ஷகீலா மற்ற ஹவுஸ்மேட்டுகளுடன் செட்டாகி நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஷகீலா சிகெரட் பிடித்த வீடியோ காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சக ஹவுஸ்மேட்டான கிரண் எலிமினேட் ஆகிவிட்ட சோகத்தில் தான் அவர் சிகரெட் பிடித்தாராம். இதனையடுத்து ஷகீலாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். யு-டியூப் சேனலில் ஷகீலா விஷ்ணுகாந்த், டிக்-டாக் சூர்யா என பலரை அழைத்து பேட்டி எடுக்கும் போது பல அட்வைஸ்களை கொடுத்தார். ஆனால், அவரே இப்போது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பங்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக சிகரெட் அடிக்கலாமா? உபதேசம் ஊருக்கு மட்டும் தானா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.