ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தமிழ்நாடு முழுக்க தனது மக்கள் இயக்கத்தை வலுவாக கட்டமைத்திருக்கிறார். அமைப்பு ரீதியாக வலுவானதாக அதை மாற்றி உள்ளார். அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளை, தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். பல்வேறு நலத்தட்ட உதவிகள் வழங்கவும், உள்ளூர் பிரச்சினைகளில் முன்னுக்கு நிற்கவும் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக அவரது கவனம் பெண்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. ரசிகர்களை போலவே பெண்களையும் மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக மாவட்ட, தொகுதி மகளிர் அணி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்திருக்கிறார். வருகிற 9ம் தேதி காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவகத்தில் அவர்களை சந்தித்து பேசுகிறார். தற்போது விஜய் அமெரிக்காவில் இருக்கிறார். இதற்காக அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. ஒருவேளை திரும்பாவிட்டால் ஆன்லைன் மூலமாக பெரிய திரையில் தோன்றி அவர் பெண் நிர்வாகிகளுடன் பேச ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.