மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'சிகாடா'. மலையாள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா இயக்கி, இசை அமைக்கிறார். தமிழில் இயக்குநர் விக்ரமன் படம் மூலமாக அறிமுகமான ரஜித் நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சியின் தலைநகரம்-2 படத்தில் வில்லனாக நடித்த ஜாய்ஸ் ஜோஸ் இப்படத்தில் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.
காயத்ரி மயூரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த கலைவீடு, வர்ணபகிட்டு தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் மூலம் தமிழுக்கு சினிமா ஹீரோயினாக வருகிறார்.
பெங்களூரு, சோலையூர், அட்டப்பாடி (தமிழக எல்லை), வாகமன் மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களில் 'சிகாடா'வின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா என நான்கு மொழிகளில் இப்படம் நேரடியாகவே படமாக்கப்பட்டுள்ளது.