லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
2023ம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் பல முக்கிய தமிழ்த் திரைப்படங்கள் வெளிவர உள்ளன. வரும் விநாயகர் சதுர்த்தி தினத்திலிருந்து அந்தப் படங்களின் வெளியீடுகள் ஆரம்பமாக உள்ளன. அதற்குப் பின் விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பல படங்கள் போட்டியிடத் தயாராகி வருகின்றன.
நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 படங்களின் டிரைலர்கள் வெளியாகின. ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்', விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி', ராகவா நடித்துள்ள 'சந்திரமுகி 2' ஆகிய டிரைலர்கள் யு டியூபில் வெளியாகின.
தற்போது வரையில் 'இறைவன்' டிரைலர் 9 மில்லியன் பார்வைகளையும், 'மார்க் ஆண்டனி' டிரைலர் 6.5 மில்லியன் பார்வைகளையும், 'சந்திரமுகி 2' டிரைலர் 3.7 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இந்த மும்முனைப் போட்டியில் 'இறைவன்' டிரைலர்தான் முந்துகிறது.
'மார்க் ஆண்டனி', 'சந்திரமுகி 2' படங்கள் செப்டம்பர் 15ம் தேதியும், படம் 'இறைவன்' படம் செப்டம்பர் 28ம் தேதியும் வெளியாகிறது.