ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தற்போது கன்னடத்தில் நடித்து வரும் கோஸ்ட் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிவராஜ்குமாரின் முதல் பான் இந்தியா படமாக இது ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகர் ஜெயராம் முதன்முறையாக கன்னடத்தில் நுழைந்துள்ளார். இந்த படத்தை ஶ்ரீனி என்பவர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் சில நிமிடங்களே வந்து போகும் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். ஆனாலும் படத்தில் கிளைமாக்சில் அவரது என்ட்ரி மாஸாக அமைந்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றது. இதை தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் ஜெயிலர் படம் மூலமாக சிவராஜ்குமாருக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் தானே சொந்த குரலில் இந்த படத்துக்காக டப்பிங் பேசுகிறார் சிவராஜ்குமார். மலையாளத்திலும், ஹிந்தியிலும் மட்டும் அவருக்கு பொருத்தமான குரலில் பேசும் நபரை வைத்து டப்பிங் செய்ய இருக்கிறார்களாம்.