அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாத மஞ்சிமா மோகன், தனது உடல் கட்டை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். திருமணத்தின்போது அதிக அளவில் வெயிட் போட்டிருந்த அவர், தற்போது தீவிரமான ஒர்க்-அவுட் காரணமாக முன்பு இருந்ததைவிட ஸ்லிம்மாகி விட்டார்.
அதோடு, கடந்த மாதத்தில் தலைகீழாக தொங்கியபடி தான் ஒர்க்-அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு இருந்த மஞ்சிமா மோகன், தற்போது மீண்டும் தான் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சிமா புஷ்-அப் செய்ய அவரது கணவரான கவுதம் கார்த்திக், மஞ்சிமாவின் இடுப்பில் ரோப் கட்டி அவரை தூக்கி உதவுகிறார்.
இந்த வீடியோவையும் பதிவிட்டு இருக்கும் மஞ்சிமா மோகன், ‛‛இது எளிதானது அல்ல. ஆனால் எதுவும் சாத்தியமற்றது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள். யாரும் உங்களை தடுக்க முடியாது,'' என்று பாசிட்டிவ்வாக ஒரு கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.