மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் |

பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முதல் சிங்கிளாக நேற்று 'ஸ்வாகதாஞ்சலி' என்ற பாடலை வெளியிட்டார்கள்.
சந்திரமுகி தோற்றத்தில் இருக்கும் கங்கனாவின் நடனப் பாடலாக இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. முதல் பாகத்தில் இடம் பெற்ற 'ரா ரா…' தெலுங்குப் பாடல் போலவே இப்பாடலையும் தெலுங்குப் பாடலாக உருவாக்கி அதை 'சந்திரமுகி 2 - தமிழ்' எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
அப்படியென்றால் 'தெலுங்கு சந்திரமுகி 2' வில் அது தமிழ்ப் பாடலாக இடம் பெறும். அந்தப் பாடல் எங்கே ? என ரசிகர்கள் கேட்கிறார்கள். ஆனால், படக்குழு வேறு எந்த மொழியிலும் இந்தப் பாடலை வெளியிடவில்லை.