ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் அளித்து சர்ச்சைகளை உருவாக்கியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட சேம்பர் முன்பு ஸ்ரீரெட்டி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை கூற தொடங்கிவிட்டார். இந்த முறை நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி காதலிப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறி உள்ளார்.
சமீபத்தில் 'போலா சங்கர்' படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கீர்த்தி சுரேஷின் கையை பிடித்து கொண்டு சிரஞ்சீவி பேசும் போது இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி தங்கையாக நடித்து உள்ளார். அடுத்த படத்தில் அவரை ஹீரோயின் ஆக சம்மதிப்பதாகவும் சிரஞ்சீவி கலகலப்பாக கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
இப்போது இது குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார். அதில், "மகள் வயது உள்ள நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார். லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இந்த மாதிரி அநாகரிகமான பேச்சு எப்படி சாத்தியம். இந்த காம ஜோக்குகளை எப்படி கூற முடியும்" என்றார்.
இதற்கு சிரஞ்சீவி ரசிகர்கள் அவர் வெறும் நகைச்சுவை உணர்வாக தான் கூறினார். சினிமாவை தாண்டி கீர்த்தியை தனது மகளாகவே சிரஞ்சீவி பார்க்கிறார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.