நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‛ஜெயிலர்'. அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மிர்ணா, ஜாக்கி ஷெரப், விநாயகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள், டிரைலர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று(ஆக., 10) படம் உலகம் முழுக்க வெளியானது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. காலை 8:00, 9:00 மணிக்கே காட்சிகள் துவங்கின. இதனால் படத்தை முன்கூட்டியே பார்க்க பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய ஊர்களுக்கு தமிழ் ரசிகர்கள் படையடுத்தனர். காலை முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருசில நெகட்டிவ்வான விமர்சனங்களும் வருகின்றன.
ரஜினியின் கடைசி இரண்டு படங்களான தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் சரியாக போகவில்லை. அதேப்போல் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட்-டும் அதிகளவில் விமர்சனங்களை சந்தித்தன. இதனால் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதை ஓரளவுக்கு படம் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினி படம் வெளியீடு என்றாலே ஓபனிங்கிற்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்தவகையில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் அவரது ரசிகர்கள் ஆட்டம், பாட்டு, பட்டாசு, பேனர்களுக்கு மாலை அணிவித்தல் மற்றும் சில ஊர்களில் பாலாபிஷேகம் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதேசமயம் இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாதது ரஜினி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.