நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படம் வினாயகர் சதுர்த்தி வெளியீடாக வர உள்ளது.
'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் பற்றி அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது, “சந்திரா-வுக்கான பின்னணி இசையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். இன்று முதல் 'முகி'க்காக ஆரம்பிக்கிறேன். ஷெனாய் ருத்ரேஷ், உங்களது ஆத்மார்த்தமான வாசிப்புக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சந்திரமுகி 2' படத்தின் வேட்டையன், சந்திரமுகி ஆகியோரது கதாபாத்திரப் போஸ்டர்களை படக்குழுவினர் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்கள். விரைவில் படத்தின் முதல் சிங்கிளையும் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.