காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் அஜயன் பாலா, திரைப்படம் தொடர்பான ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்போது தமிழ் திரைப்பட வரலாற்றை 3 பாகங்களாக எழுதி வருகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். சித்திரம் பேசுதடி, மனிதன், பள்ளிக்கூடம், சென்னையில் ஒரு நாள் படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய படங்களில் ஒரிரு காட்சிகளில் நடித்தும் இருக்கிறார்.
2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' என்ற அந்தாலஜி படத்தில் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது இந்த புதிய திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்குகிறார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். 'கன்னிமாடம்' படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், 'கோலிசோடா 2' படத்தில் நடித்த கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செழியன் ஒளிப்பதிவை கவனிக்க, சித்து குமார் இசையமைக்கிறார்.
படம்குறித்து அஜயன் பாலா கூறுகையில் "மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும், இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்," என்றார்.
சென்னையில் நேற்று நடந்த விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜும், நடிகர் சிவகுமாரும் அஜயன் பாலாவை இயக்குனராக அறிமுகப்படுத்தினார்கள். சமுத்திரகனி, தாணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.