அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி தயாரித்த வெப் தொடர் 'சுழல்' . பிரம்மா மற்றும் அனுசரன் முருகையன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெண் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே எந்த அளவுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற கதையை கோவில் திருவிழாக்களில் நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சியோடு இணைத்து திகில் தொடராக தந்திருந்தார்கள்.
இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படும் என்று புஷ்கர், காயத்ரி கூறியுள்ளனர். இரண்டாம் பாகத்துக்கான முதல்கட்ட பணி தொடங்கி உள்ளது. ஸ்கிரிப்ட் பணிகளும், லொக்கேஷன் தேர்வு பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அவர்கள் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.