போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று(ஜூலை 28) அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‛கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் நள்ளிரவு 12.01க்கு வெளியானது. டிசம்பர் 15ம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‛கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01க்கு ‛கேப்டன் மில்லர்' டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். தனுஷின் மாஸ் காட்சிகள் நிறைந்துள்ள டீசருக்கு, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இத்துடன் படம் திரைக்கு வரும் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 உலகம் முழுவதும் படம் திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.