லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் சிறப்பு வேடத்தில் மோகன்லால், முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், மிர்ணா உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இதில் ஓய்வு பெற்ற ஜெயிலர் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த படத்தில் இதுவரை ‛காவாலா மற்றும் ஹூக்கும்' என இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு, இரண்டும் வரவேற்பை பெற்றுள்ளன. இப்போது மூன்றாவதாக ‛ஜூஜூபி' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இதை அனிருத், தீ மற்றும் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். ‛‛களவாணி கண்ணய்யா காளைக்கு கொம்ப சீவி புட்ட அது முட்டி கிழிச்சு வீசாமா தான் விடுமா உன்னைய.... பகையாகி போன... பலியாவ வீணா...'' என்பது மாதிரியான வரிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது.