ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அவை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் படம் பேபி என்கிற திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியானது. இந்த படம் முதல் நாளிலிருந்தே வரவேற்பையும் வசூலையும் பெற துவங்கியது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டாவும் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன் பேசும்போது, 'நான் இங்கே புஷ்பா-2 படத்தைப் பற்றி பேச வரவில்லை. இருந்தாலும் இந்த வெற்றியை பார்க்கும்போது புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை இங்கே பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியவர், “இங்கே எல்லாமே ஒரே கட்டளையால் செய்து முடிக்கப்படும். அது புஷ்பாவின் கட்டளை” என்று கூறினார்.
புஷ்பா 2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் வசனத்தையே அல்லு அர்ஜுன் கூறியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.