மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கி நடித்து ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். வருகின்ற ஜூலை 28 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் மை டியர் மார்கண்டேயா என்ற முதல் பாடலும் வெளியானது. இந்த ஒரு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடனமாடியுள்ளார். இதற்காக இவர் பெற்ற சம்பள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பாடலுக்காக ரூ.1 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.