பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் |
சின்னத்திரை சீரியல் நடிகை சங்கீதா. பிரபல யு-டியூபர் மற்றும் பைக்கரான டிடிஎப் வாசனின் வீடியோக்களை பலமுறை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். சங்கீதா தொடர்ந்து டிடிஎப் வாசனின் வீடியோக்களை பதிவிடுவதை வைத்து இருவரும் காதலிக்கின்றனரா? என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், சங்கீதா தனது திருமண அழைப்பிதழில் மணமகனின் பெயரில் 'வி' என்ற எழுத்திற்கு பிறகு இருக்கும் எழுத்துகளை மறைத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். ஏற்கனவே, சங்கீதாவின் சகோதரரும், டிடிஎப் வாசனும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், டிடிஎப் வாசனின் பதிவுகளை தொடர்ந்து சங்கீதா பதிவிட்டு வந்ததாலும் டிடிஎப் வாசனுக்கும் சங்கீதாவுக்கும் தான் திருமணம் என செய்திகள் பரவ ஆரம்பித்தன.
இதனால், வருத்தமடைந்த சங்கீதா தனது திருமண அழைப்பிதழை முழுமையாக வெளியிட்டு 'நண்பர்களே வதந்திகளை பரப்பாதீர்கள். இதுதான் உண்மையான திருமண அழைப்பிதழ். டிடிஎப் வாசன் எனக்கு தம்பி போன்றவர்' என்று பதிவிட்டுள்ளார்.
சங்கீதா உண்மையில் விக்னேஷ் என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.