லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. விஜய்யின் எதிர்கால கனவு அரசியல் பயணம். அதைநோக்கி மெல்ல பயணித்து வருகிறார். அவரது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
கடந்தாண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அவரது மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சமீபத்தில் கூட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து பாராட்டினார். தொடர்ந்து அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நாளை(ஜூலை 11) தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட போகிறார் விஜய். இதுதொடர்பாக மாவட்ட வாரியாக உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பனையூர் இல்லத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட பயணம் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் விஜய். தொடர்ந்து அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொள்கிறார்.