விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகலனாக நடித்த விக்ரம் அந்த படத்தை அடுத்து தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக நீண்ட தலை முடி, தாடி வைத்து பழங்குடியின வேடத்தில் நடித்திருக்கும் விக்ரம், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனது தாடி, தலைமுடியை எடுத்துவிட்டு அடுத்து நடிக்கும் தனது 62வது படத்திற்காக தற்போது புதிய லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
அந்த வகையில் விக்ரம் நடிக்கும் 62வது படத்தை லோகேஷ் கனகராஜின் உதவியாளர் மகேஷ் சுப்ரமணியன் என்பவர் இயக்குவதாகவும், இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்ட் எழுதுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தையும் இதற்கு முன்பு விக்ரம் நடித்த கோப்ரா படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது. மேலும் இந்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் தற்போது விஜய்யின் லியோ படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.