4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வருகின்ற ஜூலை 14 அன்று வெளியாக உள்ள திரைப்படம் மாவீரன். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் நாளை, ஜூலை 2ம் தேதி அன்று, மாலை 7 மணியளவில் வெளியாகும் என்று புதிய வீடியோ மற்றும் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் தண்ணீருக்குள் இருந்தபடி சத்தமாக கத்துகிறார் சிவார்த்திகேயன். ஏற்கனவே, ஜூலை 2ம் தேதி மாவீரன் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.