ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் துவங்கப்பட உள்ளது. விஜய் பிறந்த நாளின் போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் நான் ரெடி பாடல் வெளியிடப்பட்டு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை கோகுலம் மூவிஸ் பெற்றுள்ளது.
கேரளாவில் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் அங்கு இந்த முறை கூடுதலான தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்களைப் போலவே கேரளா ரசிகர்களும் அவர் நடித்த படங்கள் வெளியாகும் போது மிகப்பெரிய அளவில் கட்அவுட் பேனர்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.