லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பிறகு அவர் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' ஆகியவை தோல்விப் படங்களாகவே அமைந்தன. குறிப்பிடத்தக்க வசூலையும் குவிக்கவில்லை.
அதற்கடுத்து கடந்த வாரம் வெளிவந்த 'ஆதிபுருஷ்' படமும் வெளியீட்டிற்கு முன்பு கடும் விமர்சனங்களைத்தான் பெற்றது. வெளியீட்டிற்குப் பின்பும் எதிர் விமர்சனங்களும், சர்ச்சைகளும் வந்தாலும் படம் நான்கு நாட்களில் 375 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதனால், பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சலார்' படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நேற்று 'சலார்' படத்தின் 'கவுண்ட் டவுன்' போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். “சாட்சியாவதற்கு இன்னும் 100 நாட்கள்” என்ற வாசகங்களுடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'கேஜிஎப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வரும் படம் என்பதால் இப்படம் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் பெரும் வசூலைக் குவித்த 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, பதான்' ஆகிய படங்களின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று இந்திய பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.