சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” |

கன்னட திரைப்பட நடிகையான ராதிகா ப்ரீத்தி, தமிழ் சின்னத்திரையில் பூவே உனக்காக சீரியலின் மூலம் அறிமுகமானார். பூவரசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட அவர், சீரியலை விட்டு திடீரென விலகினார். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதாகவும், அதனால் தான் சீரியல்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ராதிகா ப்ரீத்தி தற்போது நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் ராதிகா ப்ரீத்தியும் இடம்பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.