அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் தற்போது 'அழகிய கண்ணே' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். நடிகை சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல் லியோனி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லியோ சிவக்குமார் பேசியதாவது : இந்த மேடை எனக்குக் கனவு , சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி, இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். , எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார், இந்த படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி என்றார்.
இந்த விழாவில் லியோனி கூறியது: “விஜய் சேதுபதிக்கு நன்றி. நான் கேட்டதும் உடனே சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார். என் மகன் என்பதற்காக இதை சொல்லவில்லை, கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் உழைப்புக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.