ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா 2016ம் ஆண்டு 'ஓய்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் பிரபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை லெமன் லீப் கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் 'மலை', அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்' படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்க உள்ள படத்திற்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காளிகாம்பாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.