ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஆதி புருஷ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் கிரீத்தி சனோன், சைப் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சிரியஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. முதலில் இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசருக்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் புதிய டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் டிரைலரை வருகின்ற ஜூன் 6ம் தேதி அன்று திருப்பதியில் பிரமாண்டமான விழாவில் படக்குழுவினர்கள் வெளியிடுகின்றனர். இந்த டிரைலர் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாம். 2 நிமிடங்கள் 27 நொடிகள் டிரைலரின் நீளம் உள்ளதாக கூறப்படுகிறது.