லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'ஜெயிலர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த். அப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவடைந்ததால் அடுத்து 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். புதுச்சேரியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எண்ணற்ற ரசிகர்கள் திரண்டு அவரைப் பார்க்க ஆர்வம் காட்டினர். அவர்களுக்காக கார் மேற்கூரையைத் திறந்தபடி ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். பலரும் அதை போட்டோ, வீடியோ எடுக்க அவை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.