'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகின்ற ஜூன் 2 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் ஆர்யா கூறுகையில், ‛‛இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம். இப்படத்தில் இடம்பெறும் வசனம் 'அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு'. நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் சமயத்தில், இதுபோன்ற வசனங்கள் தேவை என நான் நினைக்கின்றேன். வசனத்துக்காக அல்லாமல் படத்திலும் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகளும் இருக்கும்.
என் நீண்ட நாள் ஆசை கிராமத்து ஆக்ஷன் கதைகள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். இயக்குனர் முத்தையாவிடம் நான் கேட்டு கொண்டதால் தான் இந்த கதை எனக்காக உருவாக்கப்பட்டது " என இவ்வாறு தெரிவித்தார்.




