அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தாயின் தாலாட்டு பற்றி எல்லோருக்கும் தெரியும். தாயின் தாலாட்டு கேட்காமல் தூங்கியவர்கள் யாருமில்லை. கிராமிய பாடகர், திரைப்பட பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட அந்தோணிதாசன் தந்தையின் தாலாட்டு பாடல் ஒன்றை ஆல்பத்துக்காக பாடி உள்ளார். இதனை பா மியூசிக் மற்றும் கேன்வாஸ் ஸ்பேஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
"இந்தத் தாலாட்டை எழுதுவது எனக்கு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக நான் உண்மையிலேயே ஆழ்ந்த அர்த்தமுள்ள தாலாட்டுப் பாடல் ஒன்றை உருவாக்க விரும்பினேன். என் மனதுக்கு நெருக்கமான இந்த அனுபவத்தை என்னுடைய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பாடலை பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் சமர்பிக்கிறேன்” என்கிறார் அந்தோணிதாசன்.